வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Friday 10 April 2015

#10: லீ குவான் யூ

1965-யில், ஆகஸ்ட் 9-ஆம் ஆண்டு, மசேசியாவைப் பிரிந்து, திடீரென சுதந்தரம் பெற்ற சிங்கப்பூர், நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நின்றது. சுதத்திரம் பெற்றதின் ஆனந்தாத்துடன் இருந்த்த அதே வேளையில், என்னன பிரச்சனைகள் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் இருந்தது சிங்கப்பூர். இவ்வாறு, எதிர்காலத்திற்கான எந்த  உத்திரவாதமும் இல்லாமல் குழப்பமான நிலையிலிருந்த சிங்கப்பூர், 50 வருடங்களுக்குப் பிறகு, மிகவும் வெற்றிகரமான ஒரு நாடாக முன்னேறியுள்ளது. இந்த பாராட்டக்குரிய முன்னேற்றத்திற்கு பலரும் அரும்பாடுப்பட்டுள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர், சமீபக் காலத்தில் மறைந்த, திரு லீ குவான் யூ.



இவ்வாண்டு, மார்ச் மாதம் 23 அன்று, அதிகாலை 3.18, சிங்கப்பூர் ஓர் பேர் துயரத்தை சந்தித்தது. அப்போது தான், சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் திரு லீ குவான் யூ. சிங்கப்பூருக்கு சுதந்திரம் முன்னிலையிலிருந்து வாங்கி தந்தவர் அவரே. சிங்கப்பூரை தன் பிள்ளைப் போலவே கருதி, வளர்த்து, மேம்படுத்தி ஆளாக்கியவர் இவரே. தன் வாழ்க்கை முழுவதையும் சிங்கப்பூர் என்கிற தேசத்தை உருவாக்குவதற்கே அர்பனித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு, தமது எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக தெரிந்திருந்த மக்களுக்கு, நம்பிக்கையை ஊட்டி, ஒரு வெற்றிகரமான நாட்டை உருவாக்க வழிகாட்டியவர் இவரே.

திரு லீ குவான் யூ, 3 June 1959-யிலிருந்து, 29 November 1990 வரை சிங்கப்பூரின் முதல் பிரதமர் பொறுப்பைக் கொண்டிருந்தார். அதன் பிறகு, அவர் 28 November 1990-யிலிருந்து, 12 August 2004 வரைக்கும் சிங்கப்பூர் மூத்த அமைச்சராக பணியாற்றினார். அவர், 12 August 2004-யிலிருந்து, 21 May 2011 வரைக்கும், சிங்கப்பூர் அறிவரையாளர் அமைச்சராகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமராக இருந்தக் காலத்தில், அவர் சிங்கப்பூரை முழுமையாக மாற்றிவிட்டார். மனதில் ஒரு உறுதியான இலட்சியத்தைக் கொண்டு, ஒருமனதாக செயல் பட்டார். சிங்கப்பூரர்கள் அனைவரையும் தங்களின் துறைகளில் முடிந்தவரை சிறப்பாக செயல்பட அவர் ஊக்குவித்தார். தேவையான நேரத்தில் அன்பும் தேவையான நேரத்தில் கண்டிப்பையும் கடைப்பிடித்து, தொடர்ந்த முன்னேற்றம் அடையும் படி சிங்கப்பூரின் பாதையை அமைத்தார். கல்வி, வீடு வசதிகள், உடல்நலம், தொழில்நுட்பம், வெளிநாட்டுடன் தொடர்பு, போக்குவரத்து, மக்களுக்கிக்கிடையே ஒற்றுமை, அமைதி, சுற்றுசூழல், ஆகிய பல்வேறு துறைகளிலும் உயர்வை காணவைத்தார்.

சிங்கப்பூரை பத்து வருடங்களில் ஒரு மாநகரமாக மாற்றுவேன் என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றினார் அவர். அவரின் உரைகளிலிருந்தே, அவரின் மனதில் இருந்த நெருப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணத்தைக் கொண்டிருந்தார். பள்ளிகளில் இரண்டு மொழி திட்டத்தை வரவழைத்ததே அவர் தான். அனைவரும் ஒன்றாக பழகுவதற்காக ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், ஒவ்வொருவரும் தங்களில் மரபுகளையும் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்க, தாய்மொழியையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். சிங்கப்பூரை ஒரு பசுமையான நாடாக மாற்ற வேண்டும் என்று, அவரே மரங்களை நட்டு, பொது மக்களையும் சிங்கப்பூரை பசுமை நிறைந்த நாடாக மாற்ற ஊக்குவித்தார். பிற நாடுகளில், சில மத, இன பாகுபாடு இருந்தபோதும், இன சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து, சிங்கப்பூரை இனநல்லிணக்கம் நிறைந்த ஒரு நாடாக மாற்றினார். இவர் ஏற்படுத்திய முன்னேற்றங்களையும் மேம்பாட்டுகளையும் பற்றி பேசினால், பேசிக்கொண்டே இருக்கலாம்.

இப்பேர்பட்ட சிறந்த தலைவர் இறந்தது, சிங்கப்பூரின் பேரிழப்பு. அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட பலர், அழ ஆரம்பித்துவிட்டனர். அவருக்கு மரியாதை செலுத்த இலட்சக் கணக்கான சிங்கப்பூரர்கள் வரிகளில் நின்றுப் பார்த்தனர். அவர் உடலை இருதியாக NUS-க்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, பல சிங்கப்பூரர்கள், கனத்த மழையைக் கூட அலட்சியப்படுத்தி, அவரைக் கொண்டுச்சென்ற வாகனம் அவர்களைக் கடந்தப் போது, அவரின் பெயரை முழங்கிக்கொண்டு, பூக்களை வீசினர்.


இவரிடமிருந்து நாம் அனைவரும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் நமக்காக வாழ ஒரு சிறந்த நாட்டை உருவாக்கியுள்ளார்; அதற்காக, நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவது அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.



இந்த சிறந்த தலைவர், உயர்ந்த மனிதரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

Rest In Peace, Mr Lee. 


Monday 30 March 2015

#9: சிங்கப்பூரின் சுற்றிலா தளங்கள்

சிங்கப்பூரில், பல சுற்றுலாப்பயணிகளைக் காணலாம். சிங்கப்பூர் ஒரு சிறிய சிவப்புப் புள்ளியாக இருந்தாலும், பலரை ஈர்க்கும் இடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றிவே நாம் இந்த வலைப்பதிவில் காணப்போகிறோம்.

1.    Sentosa

Sentosa
நகரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்கள் தள்ளி இருக்கும் செந்தோசா தீவு, சிங்கப்பூரிலேயே மிகவும் பிரபலமான சுற்றிலா தளம். அது, கருப்பொருள் கொண்ட கவர்ச்சி இடங்கள் (themed attractions), பசுமையான மழைக்காடுகள், கடற்கரை, உலக புகழ்பெற்ற கொஃப் மைதானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள வேடிக்கை நிறைந்த சுற்றுலா தளமாகும். 500 ஹெக்டர் (500 hectares) நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த சுற்றுலாத்தளம் பார்ப்பவர்களை மெய்சிளிர்க்க வைப்பதோடு, வணிகத்திற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடமாக அமைகிறது.


2.    Singapore Flyer

Singapore flyer
165 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர் flyer, உலகிகேயே இருக்கும் மிகப்பெரிய பெர்ரிஸ் சக்கரம். ஆசிய கண்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான இடமாக திகழ்கிறது. இதிலிருந்து மெரினா பேவின் வானலைகள் மட்டுமில்லாமல் அண்டை நாடுகளான மசேசியாவையும் இந்தோனேசியாவையும் கூட சிறிதளவு காணம முடியும். பயணிகளுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை Singapore flyer அளிக்கும்.


3.    Jurong Bird Park

Jurong Bird Park
டாக்டர். கோ கெங் ஸ்வீ அமைத்த இந்த பறவை பூங்கா, உலகில் புகழைப்பெற்றுள்ள பறவை பூங்காகளில் ஒன்றாகும். மிகவும் பெரிதாக இருக்கும் இப்பூங்காவில், 400 வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. வண்ண வண்ணப் பறவைகளைக் கொண்டுள்ள இந்த பூங்காவை வந்துப் பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியான காட்சியாக அமைந்து, அவர்களை பரவசமடையச் செய்யும்.


4.    Singapore Philatelic Museum

Singapore Philatelic Museum
இந்த அரிய வகையான அருங்காட்சியகத்தில், தபால்தலைகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியங்கள், உலகின் முதல் தபால்கள் யாவை, தபால்தலைகள் அறிவியல், கலாச்சாரம், தொழில்நுட்பம், வரலாறு போன்ற தலைப்புகளை எவ்வாறு பிரதிபலிக்கின்றன, ஆகிய விஷயங்களைப் பற்றி விளக்குகின்றன.
1830-யிலிருந்து இன்றுவரை உள்ள தபால்தலைகளை கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், சுற்றுலா பார்வையாலர்களுக்க்ய் ஓர் அர்த்தமுள்ள இடமாக அமையும். வரலாறு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர், இந்த அருங்காட்சியகத்திற்கு வருவது நல்லது.



Night Safari Singapore
Top view of Singapore Infinity Pool
மேற்கூறப்பட்ட இடங்களை தவிர்த்து, மேலும் பல சுவாரஸ்சியமான சுற்றுலா தளங்கள் நிறைய உள்ளன. இயற்கையைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள விரும்புவோர், Botanical Gardens, Singapore Zoo, Night Safari, போன்ற இடங்களுக்கு செல்லலாம். கலாச்சார, வரலா றுஅறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோர், Malay Heritage Centre, Singapore National Museum ஆகிய இடங்களைச் சென்றுப் பார்க்கலாம். இல்லையென்றால், ஓய்வு எடுக்க விரும்புவோர், Infinity Pool @ Marina Bay Sands, Universal Studios, போன்ற இடங்களுக்குப் போகலாம். சிங்கப்பூரில், அனைவரும் ஏதாவது இருக்கிறது.



Singapore Infinity Pool

Singapore Food Festival

இடங்களைத் தவிர்த்து, வெளிநாட்டாளரை ஈர்க்கும் பல நடவிக்கைகளும் சிங்கையில் நடைப்பெறும். உதாரணத்திற்கு, ஆண்டுதோறும் நடைப்பெரும் சிங்கப்பூர் உணவு திருவிழா (Singapore Food Festival). சிங்கப்பூரின் இனநல்லிணக்கத்தால், சிங்கப்பூரில், பல இனங்களின் உணவு வகைகள் கிடைக்கும். இந்த பேறுபாட்டை போற்றுவதே இந்த திருவிழாவின் நோக்கம். பல இனத்தினரின் உணவு வகைகளைப் பார்க்கவும் ருசித்துப்பார்க்கவும், பல சுற்றுப்பயணிகள் திரண்டு வருவார்கள்.


#8: சிங்கப்பூரில் போக்குவரத்து

பரபரப்பான நமது சிங்கப்பூரில், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஒன்றரை மணிக்குள் செல்லமுடியும். சிங்கப்பூரின் நல்ல போக்குவரத்து வசதிகளே இதற்கு நாம் போற்றவேண்டும்.
சிங்கப்ப்புரின் பல விதமான போக்குவரத்து அமைப்புகள் உள்ளன. இந்த வலைபதியவில் மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்பைப் பற்றி காண்போம்: நில போக்குவரத்து, பொது போக்குவரத்து, பயண விமானப் போக்குவரத்து.

1.    நில போக்குவரத்து

சிங்கப்பூரின் நில போக்குவரத்தை கவனித்துக் கொள்வதற்காகவே தனிப்பட்ட அலுவலகம் உள்ளது. அது நிலைப்போக்குவரத்து ஆணையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாணையம் சிங்கப்பூரின் விரைவுவழிகளின் திட்டமிடுதல், கட்டுமான வேலைகள், பராமரிப்பு ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ளும். சிங்கப்பூரர்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும், நகர மையத்திற்கு விரைவாகவும் சுலபமாகவும் செல்ல வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்த விரைவுவழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையே சிங்கப்பூரில் உள்ள விரைவு வழிகள் ஆகும்:

Pan Island Expressway (PIE)
·       Ayer Rajah Expressway (AYE)
·       Bukit Timah Expressway (BKE)
·       Central Expressway (CTE)
·       East Coast Parkway (ECP)
·       Marina Coastal Expressway (MCE)
·       Kallang–Paya Lebar Expressway (KPE)
·       Kranji Expressway (KJE)
·       Pan Island Expressway (PIE)
·       Seletar Expressway (SLE)
·       Tampines Expressway (TPE)


2.    பொது போக்குவரத்து அமைப்பு

பொது போக்குவரத்தில், பேருந்து, ரயில், உந்துவண்டி, போன்ற போக்குவரத்து முறைகள்
இடது பக்கம்: SMRT பேருந்து, வலது பக்கம்: SBS பேருந்து
உள்ளன. பள்ளிகளுக்கும், வேலைகளுக்கும் செல்வதற்கு பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பொது போக்கு வரத்தை பயன்படுத்துகிறார்கள். பேருந்துகளில்
SBS, SMRT என்ற இரண்டு நிறுவனங்கள் உள்ளன. 2013-யிந் படி SBS-யில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளும் இருக்கின்றன; SMRT-யில் 1100-க்கு அதிகமானப் பேருந்துகளும், 100-க்கு மேற்பட்ட பேருந்து சேவைகளும் உள்ளன.


அடுத்ததாக, ரயில் போக்குவரத்தில் 2 வகைகள் உள்ளன:
-       மாஸ் விரைவு போக்குவரத்து (Mass Rapid Transit – MRT)
-       லைட் ரெயில் போக்குவரத்து (Light Rail Transit – LRT)

Mass Rapid Transit (MRT)
MRT ரயில் சேவையில் மொத்த நீளம் 153.2 கிலோமீட்டர். நூற்றுக்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ள MRT-யில் 5 முக்கிய சேவைகள் உள்ளன. அவை, SMRT நிறுவனம் பார்த்துக்கொள்ளும் வட தென் சேவை (North-South Line), கிழக்கு மேற்கு சேவை (East-West Line), வட்ட சேவை (Circle Line) ஆகியவையும், SBS நிறுவனம் பராமரிக்கும் வட கிழக்கு சேவை (North-East Line), கீழ்டவுன் சேவை (Downtown Line) ஆகியவை ஆகும்.
உந்துவண்டிகளும் சிங்கப்பூரர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சேவையாக உள்ளது.


3. பயண விமானப் போக்குவரத்து 

சிங்கப்பூர் ஆறு விமானங்களைக் கொண்டுள்ளது. அவை:
-        Singapore Airlines 
-        Jetstar Asia Airways 
-        Scoot 
-        SilkAir 
-        Tigerair 
-        Valuair 

Singapore Airlines (SIA)
இவற்றில், நமது தேசிய சின்னத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines), சாங்கி விமானநிலையத்தின் இரண்டாம், மூன்றாம் முனைகளில் (Terminal 2 and 3) செயல்படுகிறது.

சிங்கப்பூரில் Changi, Seletar இரண்டு விமானநிலையங்கள் உள்ளன. சிங்கையின் முதல் விமான நிலையானமான Seletar விமானநிலையம், இப்போது, பெரும்பாலும் தனியார் விமான போக்குவரத்துகாகவே செயல்படுகிறது. Changi விமானநிலையம், இந்த பகுதியிலேவே மிக முக்கிய விமான மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தீவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம் 58 நாடுகளில் உள்ள 185 நகரங்களில் செயல் ஆற்றௌகிறது. இந்நிலையம் 3 முனையங்களைக் கொண்டுள்ளது; சில வருடங்களுக்கு முன் இருந்த பஞ்சட் முனை, 4-ஆம் முனைக்கு வழிவிடுவதறகாக இடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருப்பதால் இதை சுற்றுலா பயணிகலை ஈர்க்கும் என்றுக்கூடக் கூறலாம்!



Terminal 3 @ Changi Airport