வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Saturday 28 March 2015

#3: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 1)

ஒவ்வொறு நாட்டிற்கும் தனிப்பட்ட தேசிய சின்னங்கள் இருக்கும். சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் யாவை?

சிங்கப்பூரின் தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் காணலாம்.


1.    தேசிய கீதம்
“Majulah Singapura” என்கிற நமது தேசிய கீதம், 1958-யில் என்சிக் சுபிர் (Encik Zubir) என்பவரால் இசையமைக்கப்பட்டது. முதல் முதலாக சிங்கப்பூர் அறை குழுமத்தில் வாசிக்கப்பட்ட அக்கீதம், இரண்டாவது முறையாக 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி, மீண்டும் வாசிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அது சிங்கப்பூரின் அதிகாரத்துவமான தேசிய கீதமாக வாசிக்கப்பட்டது.

மலாய் மொழியில் இக்கீதம் எழுதப்பட்டது. “Majulah Singapura” என்னும் வரி, மலாய் மொழியில், “முன்னேறு சிங்கப்பூர்” என்கிற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதை எழுதும் போது, சிங்கப்பூரை முன்னேற ஊக்குவிக்கும் விதத்திலும் அனைவரும் புரியும் அளவுக்கு எளிமையான முறையிலும் எழுதுவதில் கவனம் செலுத்தியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார், திரு. சுபிர் அவர்கள்.

இதுவே சிங்கப்பூரின் தேசிய கீதம்:

Majulah Singapura

Mari kita rakyat Singapura
Sama-sama menuju bahagia
Cita-cita kita yang mulia
Berjaya Singapura
Marilah kita bersatu
Dengan semangat yang baru
Semua kita berseru
Majulah Singapura
Majulah Singapura!


2.    தேசிய உறுதிமொழி
1950-களிலும், 1960-களிலும் தான் சிங்கப்பூரில் அதிகமான இண சம்மந்தப்பட்ட கலவரங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1965-யில் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில், இனங்கள், மற்றும் மதங்களில் சேர்ந்த  சிங்கப்பூரர்களுக்கு பொது அடையாளம் பெற வேண்டிய நிலைமை உடனடி அவசியமாக திகழ்ந்தது. இதற்கான முதல் படி, ஒரு தேசிய உறுதிமொழியே.

சிங்கப்பூரின் உறுதிமொழி திரு. சி. ராஜரத்தினத்தால் எழுதப்பட்டது. நமது உறுதிமொழி, நாம் அனிவரும் மதம், இணம் ஆகியவற்றை பார்க்காமல், ஒற்றுமையாக, சமத்துவமும் நீதியும் நிறைந்த மகிழ்ச்சியான, வெற்றிகறமான நாடாக முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தி, ஊக்குவிக்கிறது.

முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உறுதிமொழி, சிங்கப்பூரின் மற்ற 3 தேசிய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. நமது உறுதிமொழியை (ஆங்கிலத்திலும் தமிழிலும்) கீழ் காணலாம்:

We, the citizens of Singapore,
pledge ourselves as one united people,
regardless of race, language or religion,
to build a democratic society
based on justice and equality
so as to achieve happiness, prosperity and
progress for our nation.

சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம்
ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, நம் நாடு
மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும்
வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும்
அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக
சமுதாயத்தை உருவாக்குவதற்கு
உறுதி மேற்கொள்வோம்.

சிங்கப்பூரர்கள் உறுதிமொழியை, தேசிய விசுவாசத்தை குறிக்கும் வகையில், தங்கள் மார்ப்பின் இடதுப்பக்கத்தில் தங்களின் வலது கைகளை வைத்துக்கொண்டே ஒப்பிக்கவேண்டும்.


3.    தேசியக் கொடி
ஓர் தேசத்தின் கொடி, அதன் மாநில அந்தஸ்த்து, அதன் கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பிரதிப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. சிங்கப்பூரின் தேசியக் கொடியைப் பற்றிய தெளிவான யோசனையைக் கொண்டிருந்தார், துணைப்பிரதமர் டாக்டர். தொ சின் சை. பல ஆலோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பிறகு, இறுதி வடிவமைப்பு முடிவு செய்யப்பட்டது. முதல் முதலாக, 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி சிட்டி ஹால் சேம்பர்ஸில், சிங்கப்பூரின் கொடி வெளியிடப்பட்டது. 1965-யில், சுதந்திரத்தை முன்னிட்டு அது அதிகாரத்துவமாக சிங்கையின் கொடியாக ஏற்கப்பட்டது.


தேசியக் கொடி இரண்டுப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பிரிவு சிவப்பு நிறத்தையும், கீழ் பகுதி வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. சிவப்பு பகுதியில், ஒரு வெள்ளை அறைச்சந்திரன் உள்ளது. அச்சந்திரனுக்கு பக்கத்தில் 5 வெள்ளை நட்சத்திரங்கள் வட்டவடிவில் இருக்கின்றன.

கொடியின் மேல் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், கீழ் வெள்ளைப் பகுதி, நீடிநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

நமது கொடியை சிங்கப்பூரர்களாக, மதிப்புடனும் கௌரவத்துடனும் கையாளுவது அவசியம். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரர்கள், குறிப்பாக கட்டடங்களில் வாழ்போர், தேசிய கொடியை வீட்டிற்கு வெளியே கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம்.



1 comment:

  1. சரியான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete