வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Sunday 29 March 2015

#5: சிங்கையில் இனநல்லிணக்கமும் கலாச்சாரமும்

இந்தியாவைப் பார்த்தால், பெரும்பாலானோர் இந்தியர்களே.
மலேசியாவில், அதிகமான மலாய்க்காரர்களே உள்ளனர்.
சீனாவில், சீனர்களே அதிகம்.

ஆனால், சிங்கப்பூர் சற்று வேற்றுப்பட்டது. சிங்கப்பூரில், பல இனத்தினற்களுக்கும் பல மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாவதை பரவலாகக் காணலாம்.

மற்றவர்களின் கலாச்சாரங்களையும் இன/மத நம்பிக்கைகளாயும் மதித்து நடத்தவேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் பெரிதும் வலியுருத்துகிறது. நமது கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சிங்கப்பூரர்கள், சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஒரு சிங்கப்பூரர், மற்ற இனத்தினரைப் பற்றி ஒரு உணர்வற்ற கருத்தைச் சொன்னால், அது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவருக்கு அபராதம் அளிக்கப்படுவதோடு, தன் வேலையை இழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.

இனநல்லிணக்கத்தை மேலும் வலியுறுத்த ஆண்டுதோரும் ஜூலை 21-ஆம் தேதி இணநல்லிணக்கத் தினத்தைக் கொண்டாடுகிறோம். இத்தினத்தன்று, பள்ளி மாணவர்கள் தங்களின் கலாச்சார ஆடைகளில் வருவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்நாள், நம்மை சுற்றி இருக்கிறவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. அதே வேளையில், மாணவர்கள் தங்களின் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கவும் உதவுகிறது.

சிங்கப்பூரின் இருமொழி திட்டத்தைப் பற்றிய ஒரு செய்தி
சிங்கப்பூரில், அனைவரும் ஆங்கிலத்தை தங்களின் முதல் மொழியாகவும் தங்களின் தாய்மொழியை இரண்டாம் மொழியாகவும் கற்க வேண்டும். ஆங்கிலத்தையே வேலை நேரங்களில் பயன்படுத்த வேண்டும்; இதன் மூலம், சிங்கப்பூரர்களுக்கிடையே உள்ள தொடர்பு வலுபெறும். அதே நேரத்தில், தாய்மொழியைக் கற்றுக்கொளவதன் நோக்கம், சிங்கப்பூரர்கள் தங்களின் கலாச்சார வேர்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதே, என்றுக் கூறினார், இந்த இருமொழி திட்டத்தை அறிமுகப்படுத்திய திரு. லீ குவான் யூ.


லிட்டில் இந்தியா

சிங்கப்பூரில், பெரும்பாலானோர் சீனர்கள், மலாய்க்காரர்கள், அல்லது இந்தியர்கள். அனைவரும் சிதறிக்கிடக்காமல் கலந்து வாழ்ந்தாலும், அவ்விணத்தினற்களின் கலாச்சார பண்பாட்டுகளை பிரதிபலிக்கும் வண்ணம் மூன்று இனப் பகுதிகள் உள்ளன: சைனாடவுன், கம்போங் கிளாம், லிட்டில் இந்தியா. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் இம்மூன்று இனங்களின் முக்கிய பண்டிகைகள் பொது விடுமுறைகளாக திகழ்கின்றன. உதாரணத்திற்கு, சீனப்புத்தாண்டு, ஹரி ராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆகியவையைக் குறிப்பிடலாம். கலாச்சாரத்தை மேலும் வலியுறுத்த, பல நிறுவனங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை சமூக மன்றங்களின் ஏற்பாடு செய்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபக் காலத்தில், நன்யாங் தொழினுட்பக் கல்லூரி, தங்கிலின் சமூக மன்றத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். அது மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது.

கம்போங் கிளாம்
சைனாடவுன்
இக்கொண்டாங்களில், பண்டிகையைக் கொண்டாடும் இனத்தினரைத் தவிர, மற்ற இனத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். இதன் மூலம், அந்த தனிப்பட்ட கலாச்சாரத்தை சேர்ந்தவர், அதை மறக்காமல் இருக்க உதவுவோடு, மற்ற இனங்களும் அக்கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளலாம். இதனால், இனநல்லிணக்கமும் மேம்படும்.


சிங்கப்பூரர்கள் ஆகிய நாம், இவ்வினநல்லிணக்கத்தைக் கடைபிடிப்பது அவசியம். இவ்வொற்றுமையே நமது நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகிறது. இந்நல்லிணக்கமே நம்மை வேறு நாடுகளிலிருந்து வேறுப்படுத்துகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக கலந்திருப்பது நமது சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

No comments:

Post a Comment