வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Saturday 28 March 2015

#1: சிங்கப்பூரின் தேசிய தினம்

1819-யில், தாமஸ் ஸ்டம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரைக் கண்டறிந்தபோது, அது ஒரு சிறிய மீன்பிடி இராமமாக இருந்தது. ஆனால், மலேயாவின் (தற்போதைய மலேசியா) தெற்கில் இருந்த அது, அதன் சாதகமான புவியல் இடத்தின் காரணத்தால், பெரும் லாபத்தை ஈட்டும் வர்த்தக துறைமுகமாக அமையும் என அவர் உணர்ந்தார். ஆகையால், ராஃபில்ஸ், ஜொஹொரின் சுல்தானுடன், ப்ரிட்டிஷ் இழக்கிந்தியா நிறுவனத்தின் சார்பில், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். அதன் பிறகு, சுல்தான் ஹுஸேனின் அனுமதியுடன் சிங்கப்பூர், ப்ரிட்டிஷின் வர்த்தக நிறுவனங்களிள் ஒன்றாக மாறியது. ராஃபில்ஸ், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன், சிங்கையில் 1000 பேர் மட்டுமே இருந்தனர். அதில் பெரும்பாசானோர் மலாய்க்காரர்கள். ஆனால், 1860-களில், சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிவெகுவாகவே 80000-த்தை மிஞ்சியது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனர்கள். நிறைய வெளிநாட்டர்கள், சிங்கப்பூரின் செழிப்பான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கே வந்தனர். 1870-க்கு பிறகு, சிங்கப்பூர் உலகலவில் ஒரு ரப்பர் ஏற்றுமதி மையமாக முன்னேறியது.

அதன் பொருளாதாரம் முன்னேறிக்கொண்டே இருந்த வேளையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. அப்போது, ஜப்பானியர்கள் ப்ரிட்டிஷின் பிரதேசங்களை தாக்கி ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்கள் மலேசியாவை ப்ரிட்டிஷிடமிருந்து கைப்பற்றியதைத் தொடந்து, சிங்கப்பூரின் மேல் தாக்குதல்களை நடத்தியது. இராணுவ பலத்தையும், மன பசத்தையும் இழந்த ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்களிடம் 1942-யில் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சரணடைந்தது.

ஜப்பானிய ஆக்கிரமப்பின் காலம், சிங்கப்பூரர்கள் மிகவும் அவதிப்பட்டக் காலம் எனக்கூறலாம். ஜப்பானிய இராணுவ வீரர்கள், சிங்கப்பூர் மக்களை, குறிப்பாக சீனர்களை, மிகவும் கடுமையானகவும் மோசமாகவும் நடத்தினர். கண்டிப்பாக இருந்த அவர்கள், அவர்களுக்கு பிடிக்காததை செய்தால், உடனடியாக மரண தண்டனையை வழங்கினர். மேலும், அவர்களுக்கு எதிராக வேலை செய்பவரைக் கண்டறிந்தால், அவர்கள் தேவைப் படும் தகவல்களை கூறுவது வரையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பின் வேளையில் நிறையப் பேர் கொல்லப்பட்டனர்; பலர் தங்களின் குடும்பத்தினரையும் அன்புக்கூறியவர்களையும் இழந்தனர்.

1945-யின் செப்டம்பர் மாதத்தில், ஜப்பானியர்கள் சரணடைந்ததால், சிங்கப்பூர் மீண்டும் ப்ரிட்டிஷின் அட்சிக்கு திரும்பியது. ஜப்பானியர்கள் போய்விட்டார்கள் என்று மகிழ்ந்தாலும், பலர், ப்ரிட்டிஷின் மோசமான பாதுகாப்பை எண்ணி கோபித்துக்கொண்டனர். சிங்கப்பூரில், கம்யூனிசம் பரவவும் ஆரம்பித்தது. கம்யூனிசத் தாக்கமே, சிங்கப்பூரில் பிறகு நடந்த மரியா ஹெர்டொக், ஹொக் லீ ஆகிய கலவரங்களுக்கு வழிவகுத்ததது.

1955 ஆம் ஆண்டு, தொழிலாளர் முன்னணி கட்சியின் சுதந்திர தலைவர், டேவிட் மார்ஷல் சிங்கப்பூரின் முதல் பொதுத்தேர்தலில் வெற்றி வெற்றார். ஆனால், அவரால் ப்ரிட்டிஷை சிங்கப்பூருக்கு சுதந்திரம் அளிக்க சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவருக்கு அடுத்து, லிம் யூ ஹொக் அந்நிலையில் அமர்த்தப்பட்டார். அவரால், ப்ரிட்டிஷிடம் சிங்கப்பூருக்கு தன்னாட்சி (self-government) அளிப்பதற்கு சம்மதிக்க வைத்தார். தன்னாட்சி என்றால் அனைத்து அம்சங்களையும் சிங்கப்பூரே தானாக கவணித்துக்கொள்ளலாம். ஆனால், நாட்டு பாதுகாப்பையும் வெளிநாட்டின் தொடர்புகளையும் விஷயங்களையும் பற்றி ப்ரிட்டிஷ் அரசாங்கமே பார்த்துக்கொள்ளவதே ஒப்பந்தம்.

1959 மே மாதம், முழு உட்புற தன்னாட்சியை பெற்ற சிங்கப்பூரின் பொது தேர்தலில் மக்கள் செயலாளர் கட்சியே அபார வெற்றியைப் பெற்றது. லீ குவான் யூ, சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார்.

31 அகஸ்ட் 1963, பெரும்பாளன மக்களின் சம்மந்தத்துடன் மலேயாவுடன் மலேசியாவை அமைத்தது. ஆனால், சிங்கப்பூரின் மாநில  அரசாங்கத்திற்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் பல அரசாங்க, பொருளாதார கருத்துவேறுபாடுகள் இருந்தன.

ஆகையால், மலேசிய, சிங்கப்பூரை வெளியேறுமாருக் கேட்டுக் கொண்டது.
9 ஆகஸ்ட் 1965 அன்று, சிங்கப்பூர் சுதந்திரம்  பெற்றது. அதுவே நமது தேசிய தினமாகக் கொண்டாடுகிறோம்.


அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும்  ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சிங்கப்பூரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும், கடந்த வருதத்தில் கண்ட வளர்ச்சியை எண்ணி மேலும் மேலும் வியப்போடும், பெருமையோடும் இந்நாளைக் கொண்டாடுகிறோம். இவ்வருடம் சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை நாம் அனைவரும் பெருமையுடன் கொண்டாடுகிறோம்.



சிங்கப்பூரர் கூடி, தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர்



No comments:

Post a Comment