வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Sunday 29 March 2015

#6: சிங்கப்பூரில் கல்வி

கல்வி என்பது சிங்கப்பூரின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய வரவு செலவு தொகைகளில் சுமார் 20% கல்விக்கே செலவிடப்படுகிறது. கல்வி சமந்தப்பட்ட விஷயங்களை முடிவெடுக்கும் பொறுப்பு கல்வி அமைச்சைச் சார்ந்தது. தற்போதைய கல்வி அமைச்சர், திரு. ஹெங் ஸ்வீ கீட் (Mr. Heng Swee Keat). அரசாங்கப் பள்ளிகளின் முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்ளும் அதே வேளையில், தனியார் பள்ளிகளையும் கண்கானித்து, அவற்றுக்கு ஆலோசனைகளை வழங்குவதை தன் பொறுப்பாகக் கொண்டுள்ளது, கல்வி அமைச்சு.

சிங்கப்பூரில், கட்டாயமாக அனைத்து பிள்ளைகளும் குறைந்தது தொடக்கப்பள்ளி கல்வியையாவது முடிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், தங்களின் சொந்த தாய்மொழியை இரண்டாவது மொழியாகவும் கற்றுக்கொள்வது அவசியம். தாய்மொழிப் பாடங்களைத் தவிர்த்து, அனைத்து பாடங்களும் ஆங்கிலேயத்திலேயே கற்பிக்கப்படும்.

சிங்கப்பூரில் பொதுவாக அனைவரும் மழலையர் பள்ளிக்குப் பின் தொடக்கப்பள்ளிக்கு 7 வயதில் சேர்வார்கள். தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பில், தொடக்கப்பள்ளி கல்வியை முடிப்பதைக் குறிக்கும் வண்ணம், மாணவர்கள் PSLE என்கிற தேசிய தேர்வை செய்வார்கள். PSLE தேர்வின் மதிப்பெண்களைப் பொருத்தே மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்வர்.

உயிர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 4 அல்லது 5 வருடம் படிக்க வேண்டியிருக்கும். உயர்னிலையப்பள்ளி கல்வி முடித்தவுடன் மேலும் படிக்க விரும்புவோர் தொடக்கக் கல்லூரிலியோ பாலிடெக்னிக்யிலோ அவர்களுடைய கல்வியைத் தொடரலாம். மேற்கொண்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கலாம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS)
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS)
தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU)
சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU)
மேலாண்மை சிங்கப்பூர் நிறுவனம் (SIM)
சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT)
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD)

ஆகியவை சிங்கப்பூரில் இருக்கும் பல்கலைக்கழங்கள் ஆகும்.

மாண்வர்கள் படிப்பை தவிர்த்து, வேறு துறையிலும்  முன்னேற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளிலும், மாணவர்கள் கட்டாயமாக ஒரு இணைப்பாட நடவடிக்கையில் சேர வேண்டும். அது ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஒரு கலையாக இருக்கலாம், அதை மாணவர்களே முடிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் கல்வி துறையில் சிறப்பு திட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாணவனுக்கும், அவனுடைய தனிபட்ட பலத்தையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதற்கே இத்திட்டங்கள். உதாரணத்திற்கு, PSLE மதிப்பெண்ணுக்கு பதிலாக, பிடித்த உயர்நிலைப் பள்ளிக்கு, அவர்களின் திறமையை வைத்து Direct-School Admission (DSA) என்கிற திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மிகவும் நன்றாக செய்யும் மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை அனித்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பது சிங்கப்பூர் கல்வி அமைச்சின் குறிக்கோள்.

School of the Arts (SOTA)
மேலும், படிப்பை தவிர மற்ற அம்சங்களிலும் திறமைக்கொண்டுள்ள மாணவர்களுக்கு, அத்திறமையை வளர்த்துக்கொள்ள சிறப்பு பள்ளிகள் கட்டப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு, தொடக்கப்பள்ளி 6-ஆம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவி, நடனகலையில் சிறந்து விளங்கி, அதில் மிகவும் அதிகமான ஆர்வத்தைக் காட்டினால், அவள் ஒரு சாதாரண உயர்நிலைப்பள்ளியில் சேர்வதற்கு பதிலாக, சிங்கப்பூர் கலை பள்ளியில் (School of the Arts- SOTA) சேரலாம். NUS High School, School of Science and Technology (SST) ஆகிய சிறப்பு பள்ளிகள் அறிவியல் கணிதம் ஆகியவையிலும், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவையிலும் சிறப்பிக்கின்றன. அதேப் போல, விளையாட்டில் திறமைக்கொண்டவர்கள், சிங்கப்பூர் விளையாட்டு பள்ளியில் சேரலாம்.
 
Singapore Sports School


இதுப் போல, ஒரு மாணவனின் திறமைக்கேற்ப முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சிங்கை அரசாங்கம் அதிக அக்கறைக் காட்டி, பல்வேரு திட்டங்களியும் வாய்ப்புகளையும் அமைத்துள்ளது. சிங்கப்பூரின் படிப்பவர், கிடத்த அற்புதமான கல்விக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment