வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Friday 10 April 2015

#10: லீ குவான் யூ

1965-யில், ஆகஸ்ட் 9-ஆம் ஆண்டு, மசேசியாவைப் பிரிந்து, திடீரென சுதந்தரம் பெற்ற சிங்கப்பூர், நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நின்றது. சுதத்திரம் பெற்றதின் ஆனந்தாத்துடன் இருந்த்த அதே வேளையில், என்னன பிரச்சனைகள் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் இருந்தது சிங்கப்பூர். இவ்வாறு, எதிர்காலத்திற்கான எந்த  உத்திரவாதமும் இல்லாமல் குழப்பமான நிலையிலிருந்த சிங்கப்பூர், 50 வருடங்களுக்குப் பிறகு, மிகவும் வெற்றிகரமான ஒரு நாடாக முன்னேறியுள்ளது. இந்த பாராட்டக்குரிய முன்னேற்றத்திற்கு பலரும் அரும்பாடுப்பட்டுள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர், சமீபக் காலத்தில் மறைந்த, திரு லீ குவான் யூ.



இவ்வாண்டு, மார்ச் மாதம் 23 அன்று, அதிகாலை 3.18, சிங்கப்பூர் ஓர் பேர் துயரத்தை சந்தித்தது. அப்போது தான், சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் திரு லீ குவான் யூ. சிங்கப்பூருக்கு சுதந்திரம் முன்னிலையிலிருந்து வாங்கி தந்தவர் அவரே. சிங்கப்பூரை தன் பிள்ளைப் போலவே கருதி, வளர்த்து, மேம்படுத்தி ஆளாக்கியவர் இவரே. தன் வாழ்க்கை முழுவதையும் சிங்கப்பூர் என்கிற தேசத்தை உருவாக்குவதற்கே அர்பனித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு, தமது எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக தெரிந்திருந்த மக்களுக்கு, நம்பிக்கையை ஊட்டி, ஒரு வெற்றிகரமான நாட்டை உருவாக்க வழிகாட்டியவர் இவரே.

திரு லீ குவான் யூ, 3 June 1959-யிலிருந்து, 29 November 1990 வரை சிங்கப்பூரின் முதல் பிரதமர் பொறுப்பைக் கொண்டிருந்தார். அதன் பிறகு, அவர் 28 November 1990-யிலிருந்து, 12 August 2004 வரைக்கும் சிங்கப்பூர் மூத்த அமைச்சராக பணியாற்றினார். அவர், 12 August 2004-யிலிருந்து, 21 May 2011 வரைக்கும், சிங்கப்பூர் அறிவரையாளர் அமைச்சராகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமராக இருந்தக் காலத்தில், அவர் சிங்கப்பூரை முழுமையாக மாற்றிவிட்டார். மனதில் ஒரு உறுதியான இலட்சியத்தைக் கொண்டு, ஒருமனதாக செயல் பட்டார். சிங்கப்பூரர்கள் அனைவரையும் தங்களின் துறைகளில் முடிந்தவரை சிறப்பாக செயல்பட அவர் ஊக்குவித்தார். தேவையான நேரத்தில் அன்பும் தேவையான நேரத்தில் கண்டிப்பையும் கடைப்பிடித்து, தொடர்ந்த முன்னேற்றம் அடையும் படி சிங்கப்பூரின் பாதையை அமைத்தார். கல்வி, வீடு வசதிகள், உடல்நலம், தொழில்நுட்பம், வெளிநாட்டுடன் தொடர்பு, போக்குவரத்து, மக்களுக்கிக்கிடையே ஒற்றுமை, அமைதி, சுற்றுசூழல், ஆகிய பல்வேறு துறைகளிலும் உயர்வை காணவைத்தார்.

சிங்கப்பூரை பத்து வருடங்களில் ஒரு மாநகரமாக மாற்றுவேன் என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றினார் அவர். அவரின் உரைகளிலிருந்தே, அவரின் மனதில் இருந்த நெருப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணத்தைக் கொண்டிருந்தார். பள்ளிகளில் இரண்டு மொழி திட்டத்தை வரவழைத்ததே அவர் தான். அனைவரும் ஒன்றாக பழகுவதற்காக ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், ஒவ்வொருவரும் தங்களில் மரபுகளையும் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்க, தாய்மொழியையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். சிங்கப்பூரை ஒரு பசுமையான நாடாக மாற்ற வேண்டும் என்று, அவரே மரங்களை நட்டு, பொது மக்களையும் சிங்கப்பூரை பசுமை நிறைந்த நாடாக மாற்ற ஊக்குவித்தார். பிற நாடுகளில், சில மத, இன பாகுபாடு இருந்தபோதும், இன சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து, சிங்கப்பூரை இனநல்லிணக்கம் நிறைந்த ஒரு நாடாக மாற்றினார். இவர் ஏற்படுத்திய முன்னேற்றங்களையும் மேம்பாட்டுகளையும் பற்றி பேசினால், பேசிக்கொண்டே இருக்கலாம்.

இப்பேர்பட்ட சிறந்த தலைவர் இறந்தது, சிங்கப்பூரின் பேரிழப்பு. அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட பலர், அழ ஆரம்பித்துவிட்டனர். அவருக்கு மரியாதை செலுத்த இலட்சக் கணக்கான சிங்கப்பூரர்கள் வரிகளில் நின்றுப் பார்த்தனர். அவர் உடலை இருதியாக NUS-க்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, பல சிங்கப்பூரர்கள், கனத்த மழையைக் கூட அலட்சியப்படுத்தி, அவரைக் கொண்டுச்சென்ற வாகனம் அவர்களைக் கடந்தப் போது, அவரின் பெயரை முழங்கிக்கொண்டு, பூக்களை வீசினர்.


இவரிடமிருந்து நாம் அனைவரும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் நமக்காக வாழ ஒரு சிறந்த நாட்டை உருவாக்கியுள்ளார்; அதற்காக, நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவது அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.



இந்த சிறந்த தலைவர், உயர்ந்த மனிதரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

Rest In Peace, Mr Lee.