வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Sunday, 29 March 2015

#5: சிங்கையில் இனநல்லிணக்கமும் கலாச்சாரமும்

இந்தியாவைப் பார்த்தால், பெரும்பாலானோர் இந்தியர்களே.
மலேசியாவில், அதிகமான மலாய்க்காரர்களே உள்ளனர்.
சீனாவில், சீனர்களே அதிகம்.

ஆனால், சிங்கப்பூர் சற்று வேற்றுப்பட்டது. சிங்கப்பூரில், பல இனத்தினற்களுக்கும் பல மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாவதை பரவலாகக் காணலாம்.

மற்றவர்களின் கலாச்சாரங்களையும் இன/மத நம்பிக்கைகளாயும் மதித்து நடத்தவேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் பெரிதும் வலியுருத்துகிறது. நமது கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சிங்கப்பூரர்கள், சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஒரு சிங்கப்பூரர், மற்ற இனத்தினரைப் பற்றி ஒரு உணர்வற்ற கருத்தைச் சொன்னால், அது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவருக்கு அபராதம் அளிக்கப்படுவதோடு, தன் வேலையை இழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.

இனநல்லிணக்கத்தை மேலும் வலியுறுத்த ஆண்டுதோரும் ஜூலை 21-ஆம் தேதி இணநல்லிணக்கத் தினத்தைக் கொண்டாடுகிறோம். இத்தினத்தன்று, பள்ளி மாணவர்கள் தங்களின் கலாச்சார ஆடைகளில் வருவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்நாள், நம்மை சுற்றி இருக்கிறவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. அதே வேளையில், மாணவர்கள் தங்களின் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கவும் உதவுகிறது.

சிங்கப்பூரின் இருமொழி திட்டத்தைப் பற்றிய ஒரு செய்தி
சிங்கப்பூரில், அனைவரும் ஆங்கிலத்தை தங்களின் முதல் மொழியாகவும் தங்களின் தாய்மொழியை இரண்டாம் மொழியாகவும் கற்க வேண்டும். ஆங்கிலத்தையே வேலை நேரங்களில் பயன்படுத்த வேண்டும்; இதன் மூலம், சிங்கப்பூரர்களுக்கிடையே உள்ள தொடர்பு வலுபெறும். அதே நேரத்தில், தாய்மொழியைக் கற்றுக்கொளவதன் நோக்கம், சிங்கப்பூரர்கள் தங்களின் கலாச்சார வேர்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதே, என்றுக் கூறினார், இந்த இருமொழி திட்டத்தை அறிமுகப்படுத்திய திரு. லீ குவான் யூ.


லிட்டில் இந்தியா

சிங்கப்பூரில், பெரும்பாலானோர் சீனர்கள், மலாய்க்காரர்கள், அல்லது இந்தியர்கள். அனைவரும் சிதறிக்கிடக்காமல் கலந்து வாழ்ந்தாலும், அவ்விணத்தினற்களின் கலாச்சார பண்பாட்டுகளை பிரதிபலிக்கும் வண்ணம் மூன்று இனப் பகுதிகள் உள்ளன: சைனாடவுன், கம்போங் கிளாம், லிட்டில் இந்தியா. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் இம்மூன்று இனங்களின் முக்கிய பண்டிகைகள் பொது விடுமுறைகளாக திகழ்கின்றன. உதாரணத்திற்கு, சீனப்புத்தாண்டு, ஹரி ராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆகியவையைக் குறிப்பிடலாம். கலாச்சாரத்தை மேலும் வலியுறுத்த, பல நிறுவனங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை சமூக மன்றங்களின் ஏற்பாடு செய்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபக் காலத்தில், நன்யாங் தொழினுட்பக் கல்லூரி, தங்கிலின் சமூக மன்றத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். அது மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது.

கம்போங் கிளாம்
சைனாடவுன்
இக்கொண்டாங்களில், பண்டிகையைக் கொண்டாடும் இனத்தினரைத் தவிர, மற்ற இனத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். இதன் மூலம், அந்த தனிப்பட்ட கலாச்சாரத்தை சேர்ந்தவர், அதை மறக்காமல் இருக்க உதவுவோடு, மற்ற இனங்களும் அக்கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளலாம். இதனால், இனநல்லிணக்கமும் மேம்படும்.


சிங்கப்பூரர்கள் ஆகிய நாம், இவ்வினநல்லிணக்கத்தைக் கடைபிடிப்பது அவசியம். இவ்வொற்றுமையே நமது நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகிறது. இந்நல்லிணக்கமே நம்மை வேறு நாடுகளிலிருந்து வேறுப்படுத்துகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக கலந்திருப்பது நமது சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

Saturday, 28 March 2015

#4: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 2)

முந்தைய வலைப்பதிவில், தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் பார்தோம். இப்பகுதியில் மேலும், தேசிய சின்னங்கள் ஆகிய மாநில முகடு, சிங்கத்தலை சின்னம், மற்றும் தேசிய மலர் பற்றி இவ்வலைப்பகுதியில் காணலாம்.


1. மாநில முகடு (state crest)
“National Coat of Arms” எனப் படும் சிங்கப்பூரின் முகடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் துணை பிரதமர், டாக்டர். தொ சின் சை (Dr. Toh Chin Chye) தான் யோசனை செய்து வைத்திருந்தார். மாநில முகடு, தேசிய கொடி ஆகிய அவரின் இரண்டு யோசனைகளையும் வரைந்து நினைவாக்கியது, கலாச்சார அமைச்சில் பணிப்புரிந்த திரு. ஜோசப்ஃ தியோ (Mr. Joseph Teo).

சிங்கப்பூரின் மாநில முகடு
இம்முகடில், தேசிய கொடியைப் போன்று உள்ள ஒரு கேடயமும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு சிங்கமும், வலது பக்கத்தில் ஒரு புலியும் உள்ளது.

தேசியக் கொடியைப் போல, இதிச் இருக்கும் கவசத்தில் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், வெள்ளைப் பகுதி, நீடித்துநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

‘Singapura’ என்பது, மலாய் மொழியில் ‘Lion city’ என்பதற்கு சமம். ஆகையால், முகடில் இருக்கும் சிங்கம், சிங்கப்பூரைப் பிரதிபலிக்கிறது. இதில் இருக்கும் புலி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இருந்த கடந்தப் பந்தங்களைக் குறிக்கிறது. அதோடு, சிங்கப்பூரின் கொள்கை, “Majulah Singapura” (முன்னேறு சிங்கப்பூர்) என்பதைக்கொண்டுள்ளா நீல நிற ரிபன் ஒன்று உள்ளது.

அதிக மதிப்புடனும் மரியாதையுடனுமே இம்முகடை நாம் பயன்படுத்த வேண்டும். அரசாங்க அமைச்சுகளுக்கு மட்டுமே இச்சின்னத்தைப் பயன்படுத்த அனுமதியுள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த பயன்களுக்கு உபயோகப் படுத்த, அரசாங்கத்திடமிருந்து அனுமதிப் பெறுவது அவசியம்.


2. சிங்கத்தலை சின்னம் (The Lion Head Symbol)
இச்சின்னம், தேசிய கொடி, மாநில முகடு ஆகியவை இருக்கும் அளவிற்கு முறைசாரா சின்னம். இச்சின்னத்தை, பொது மக்களும் நிறுவனங்களும் அனுமதிப் பெறாமல், நாட்டுப் பற்றை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்தலாம். சுலபமாக சிங்கப்பூரின் சின்னம் என்று இச்சின்னத்தை பார்த்தவுடனே அடையாளம் காணலாம்.
1989-யில், பொது மக்கள் பயன்படுத்த ஒரு தேசிய சின்னம் தேவை என்பதையறிந்து, அரசாங்கம் தீர்வு செய்தது. கலைப்பள்ளி மாணவர்கள், ஒரு சின்னத்தை வரையுமாறு கேட்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டது, திரு மைகல் லீ.

சிங்கத்தலை சின்னம்
சிங்கம் நமது நாட்டிற்கு முக்கியமான ஒரு விலங்கு. அதன் தலையைக் கொண்டுள்ள இச்சின்னம், தைரியம், பலம், சிறந்துவிளங்குதல், ஆகிய மூன்று பண்புகளை பிரதிபலிக்கிறது. இச்சின்னம், நமது தேசிய வண்ணங்களான சிவப்பு மற்றும் வெள்ளையைக் கொண்டுள்ளது. மேலும், சிங்கத்தின் 5 தலைமுடிப் பிரிவுகள், தேசிய கொடியின் 5 நட்சத்திரங்கள் குறிக்கும் நியமங்களைக் குறிக்கிறது: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

இச்சின்னம் முறைசாரம் இல்லாமல் இருந்தாலும், அதை மதித்துப் பயன்படுத்துவது சிங்கப்பூரரிகளின் கடமையாகும்.


3. Vanda 'Miss Joaquim' - சிங்கப்பூரின் தேசிய மலர்.
இந்த ஆர்கிட் மலர், Vanda hookeriana, Vanda trees ஆகிய இரண்டின் கலப்பு ஆகும். இதை முதல் முதலாக வளர்த்த Agnes Joaquim-இன் நினைவில், இம்மலருக்கு Vanda 'Miss Joaquim' என்றப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல இனங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரைப் பிரதிபலிக்க, 1981-யில், இம்மலர், நமது தேசிய மலராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மலர், இளம் நாடான சிங்கப்பூரின் தனிச்சிறப்பையும், பல்லிண ஒற்றுமையையும் குறிக்கிறது.

சிங்கையின் தேசிய மலர்: Vanda 'Miss Joaquim' மலர்



#3: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 1)

ஒவ்வொறு நாட்டிற்கும் தனிப்பட்ட தேசிய சின்னங்கள் இருக்கும். சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் யாவை?

சிங்கப்பூரின் தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் காணலாம்.


1.    தேசிய கீதம்
“Majulah Singapura” என்கிற நமது தேசிய கீதம், 1958-யில் என்சிக் சுபிர் (Encik Zubir) என்பவரால் இசையமைக்கப்பட்டது. முதல் முதலாக சிங்கப்பூர் அறை குழுமத்தில் வாசிக்கப்பட்ட அக்கீதம், இரண்டாவது முறையாக 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி, மீண்டும் வாசிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அது சிங்கப்பூரின் அதிகாரத்துவமான தேசிய கீதமாக வாசிக்கப்பட்டது.

மலாய் மொழியில் இக்கீதம் எழுதப்பட்டது. “Majulah Singapura” என்னும் வரி, மலாய் மொழியில், “முன்னேறு சிங்கப்பூர்” என்கிற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதை எழுதும் போது, சிங்கப்பூரை முன்னேற ஊக்குவிக்கும் விதத்திலும் அனைவரும் புரியும் அளவுக்கு எளிமையான முறையிலும் எழுதுவதில் கவனம் செலுத்தியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார், திரு. சுபிர் அவர்கள்.

இதுவே சிங்கப்பூரின் தேசிய கீதம்:

Majulah Singapura

Mari kita rakyat Singapura
Sama-sama menuju bahagia
Cita-cita kita yang mulia
Berjaya Singapura
Marilah kita bersatu
Dengan semangat yang baru
Semua kita berseru
Majulah Singapura
Majulah Singapura!


2.    தேசிய உறுதிமொழி
1950-களிலும், 1960-களிலும் தான் சிங்கப்பூரில் அதிகமான இண சம்மந்தப்பட்ட கலவரங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1965-யில் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில், இனங்கள், மற்றும் மதங்களில் சேர்ந்த  சிங்கப்பூரர்களுக்கு பொது அடையாளம் பெற வேண்டிய நிலைமை உடனடி அவசியமாக திகழ்ந்தது. இதற்கான முதல் படி, ஒரு தேசிய உறுதிமொழியே.

சிங்கப்பூரின் உறுதிமொழி திரு. சி. ராஜரத்தினத்தால் எழுதப்பட்டது. நமது உறுதிமொழி, நாம் அனிவரும் மதம், இணம் ஆகியவற்றை பார்க்காமல், ஒற்றுமையாக, சமத்துவமும் நீதியும் நிறைந்த மகிழ்ச்சியான, வெற்றிகறமான நாடாக முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தி, ஊக்குவிக்கிறது.

முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உறுதிமொழி, சிங்கப்பூரின் மற்ற 3 தேசிய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. நமது உறுதிமொழியை (ஆங்கிலத்திலும் தமிழிலும்) கீழ் காணலாம்:

We, the citizens of Singapore,
pledge ourselves as one united people,
regardless of race, language or religion,
to build a democratic society
based on justice and equality
so as to achieve happiness, prosperity and
progress for our nation.

சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம்
ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, நம் நாடு
மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும்
வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும்
அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக
சமுதாயத்தை உருவாக்குவதற்கு
உறுதி மேற்கொள்வோம்.

சிங்கப்பூரர்கள் உறுதிமொழியை, தேசிய விசுவாசத்தை குறிக்கும் வகையில், தங்கள் மார்ப்பின் இடதுப்பக்கத்தில் தங்களின் வலது கைகளை வைத்துக்கொண்டே ஒப்பிக்கவேண்டும்.


3.    தேசியக் கொடி
ஓர் தேசத்தின் கொடி, அதன் மாநில அந்தஸ்த்து, அதன் கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பிரதிப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. சிங்கப்பூரின் தேசியக் கொடியைப் பற்றிய தெளிவான யோசனையைக் கொண்டிருந்தார், துணைப்பிரதமர் டாக்டர். தொ சின் சை. பல ஆலோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பிறகு, இறுதி வடிவமைப்பு முடிவு செய்யப்பட்டது. முதல் முதலாக, 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி சிட்டி ஹால் சேம்பர்ஸில், சிங்கப்பூரின் கொடி வெளியிடப்பட்டது. 1965-யில், சுதந்திரத்தை முன்னிட்டு அது அதிகாரத்துவமாக சிங்கையின் கொடியாக ஏற்கப்பட்டது.


தேசியக் கொடி இரண்டுப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பிரிவு சிவப்பு நிறத்தையும், கீழ் பகுதி வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. சிவப்பு பகுதியில், ஒரு வெள்ளை அறைச்சந்திரன் உள்ளது. அச்சந்திரனுக்கு பக்கத்தில் 5 வெள்ளை நட்சத்திரங்கள் வட்டவடிவில் இருக்கின்றன.

கொடியின் மேல் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், கீழ் வெள்ளைப் பகுதி, நீடிநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

நமது கொடியை சிங்கப்பூரர்களாக, மதிப்புடனும் கௌரவத்துடனும் கையாளுவது அவசியம். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரர்கள், குறிப்பாக கட்டடங்களில் வாழ்போர், தேசிய கொடியை வீட்டிற்கு வெளியே கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம்.



#2: சிங்கப்பூரின் மொத்த பாதுகாப்பு தினம்

ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சுகந்திரம் கிடைத்தது. இந்த நாளை சிங்கபூரர்கள் தேசிய தினமாக கொண்டாடுகின்றனர். ஆனால், ஆண்டுதூரும் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அன்று ஜப்பானியர்கள் 1942-இல் சிங்கப்பூரை ஆக்கிரமிப்பு செய்த நாளைநினைவு கூறுகின்றனர் என்பது உங்களுக்கு தெர்யுமா? இத்தினத்தை 'மொத்த பாதுகாப்பு தினம்', அதாவது Total Defence Day , என்ற பெயரோடு, வருடம் தவறாமல் சிங்கபூரர்களால் அனுசரிக்கப்படுகிறது.

மொத்த பாதுகப்பு தினத்தின் சின்னம்
இத்தினதைக் ஞாபகத்தில் வைத்து கொள்வதற்கு பல்வேறு காரனம்கள் உண்டு. ஜப்பானியர்களை எதிர்த்து போராடி, வீர மரணத்தை எதிர்நோக்கிய  நம் இராணுவ வீரர்களையும் அவர்களின் மதிப்புமிக்க பணியையும் பங்காரளையும் நினைவுகூர்ந்து பாராட்ட சிங்கபூரர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். நம் நாடு இன்று உள்ள உயர்ந்த நிலையை அடைய உதவியவர்களை ஞாபகம் கொள்ளவதே அவர்களுக்கு கட்டும் மரியாதையை அல்லவா? மேலும், இன்றுள்ள சிங்கபூரின் பாதுகாப்பான நிலையை எண்ணி பெருமை பாடவும் செய்கிறது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பொது இருந்த சிங்கபூரிலிருந்து நாம் இன்றுவரை கண்ட அபார வளரிசியையும் இந்நாள் வலியுறுத்துகிறது.

ஆல், மேல்கூறப்பட்ட காரணங்களுடன், மொத்த பாதுகாப்பு தினத்தின் இன்னொரு அதிமுக்கியமான நோக்கம் ஒன்று உள்ளாது: நமது பாதுகாப்பும் மந்து நாட்டின் பாதுகாப்பும் நம் கைகளில் தாந இருக்கிறது என்பதை சிங்கப்பூரர்களுக்கு உணர்த்துவதே ஆகும்.

தற்போது பாதுகாப்பாக தானே உள்ளோம் என்ற அலட்சியத்தை சிங்கப்பூரர்களின் மனதிலிருந்து நீக்கி ஒவ்வொரு நொடியும் சுற்றுப்புரத்தைன் மீது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தி கூறவே இந்நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.

சிங்கப்பூருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் பல எதிர்பாராத வடிவங்களில் வர முடியும். பயங்கரவாத திட்டங்களும் தாக்குதல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பயணிகள் தெரிந்தோ தெரியாமலோ நோய்களை பரப்பிவிடலாம். ஒரு உணர்வற்ற செயல் அல்லது சொல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சமூக பதட்டம் தூண்டி பொது மக்களிடயே சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தலாம். உலக பொருளாதார நெருக்கடி ஒன்று, ஒரு உள்நாட்டு பொருளாதார சிக்கலாக மாற இயலும். இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், சக்தி, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக, திருட்டு, சட்டவிரோத புலம்பெயர்வு, மற்றும் இணைய குற்றம், இன்று நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பரவலான மற்ற உதாரணங்கள். இது போன்ற சவால்களுக்கு பதிலடி கொடுக்க ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் பங்கும் தேவைப்படுகிறது - இளையோர் மற்றும் முதியோர், ஆண்கள் மற்றும் பெண்கள், இனம் அல்லது மதம் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு சிறிய செயலும் நமது பாதுகாப்புக்கு முக்கியம்.

பெயர் உணர்த்துவதுப் போல, மொத்த பாதுகாப்பு தினம் நாம் பல்வேறு அம்சங்களிலும் நம் நாட்டைப் பாதுகாத்து, மொத்த பாதுகாப்பை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. முழு பாதுகாப்பு 5 அம்சங்களாக பிரிக்கப் படுகிறது.

1.        இராணுவ பாதுகாப்பு
நமது மீது தாக்குதல்களை நிறுத்தவும், தாக்கிய போது, நம்மை பாதுகாக்கவும், நாம் ஒரு வலுவான இராணுவ பாதுகாப்பை வளர்ச்செய்ய வேண்டும். அதனால் தான், நமது Singapore Armed Forces (SAF), என்கிற இராணுவ படைகள் உள்ளது. SAF அதுமட்டுமல்லாமல், 18 வயது எட்டிய ஆண் குடிமக்கள் தேசிய சேவை 2 வருடங்களுக்கு புரிய வேண்டும். இதனால், ஆபத்து நேரத்தின் போது, SAF-யில் இருக்கும் இராணுவர்களுடன் தேசிய சேவை புரிந்தவர்களும் நாட்டை தாக்குதல்களிலிருந்து காக்கலாம். தாய்மார்களும், சகோதிரிகளும், மனைவிகளும் இவர்களுக்கு ஆதரவு அளித்து உதவலாம்.

2.        சிவில் பாதுகாப்பு - நெருக்கடி காலத்தில் நம்மை சுற்றியிருக்கும் நம் குடும்பம், நண்பர்கள் மற்றும் மக்கள் கவனிப்பது

3.       பொருளாதார பாதுகாப்பு - ஒரு வலுவான மற்றும் நெகிழ்திறன் பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குவது.

4.       சமூக பாதுகாப்பு- ஒர் ஒற்றுமையான சமூகமாகவும் இணநல்லிணக்கத்துடனும் வாழ்வது. சுயனலத்துடன் இல்லாமல், மற்றவர்களிடம் அன்பாகவும் பரிவாகவும் பழகினால் தான்

5.       உளவியல் பாதுகாப்பு - மன உறுதியுடன் இருப்பது

இவ்வைந்து அம்சங்களும், ஒவ்வொருவரும் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு வகையிலாவது பங்களிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

மொத்த பாதுகாப்பு தினத்தின் 5 தூண்கள்: இராணுவ பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, பொருளாதார பாதுகப்பு, சமூக பாதுகாப்பு, உளவியல் பாதுகாப்பு

இந்நாள் அன்று, மாலை 6.20-க்கு சிங்கப்புரின் அவசர ஒலிகள் ஒலிக்கப்படும். 10 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில், ஒவ்வொறு ஒலியின் அர்த்தமும், அவற்றின் முக்கியத்துமும் விளக்கப் படும். உண்மையான ஆபத்து நேரங்களின் போது இவ்வொளிகளைக் கேட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொறுவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் குறிக்கோளாகும்.

#1: சிங்கப்பூரின் தேசிய தினம்

1819-யில், தாமஸ் ஸ்டம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரைக் கண்டறிந்தபோது, அது ஒரு சிறிய மீன்பிடி இராமமாக இருந்தது. ஆனால், மலேயாவின் (தற்போதைய மலேசியா) தெற்கில் இருந்த அது, அதன் சாதகமான புவியல் இடத்தின் காரணத்தால், பெரும் லாபத்தை ஈட்டும் வர்த்தக துறைமுகமாக அமையும் என அவர் உணர்ந்தார். ஆகையால், ராஃபில்ஸ், ஜொஹொரின் சுல்தானுடன், ப்ரிட்டிஷ் இழக்கிந்தியா நிறுவனத்தின் சார்பில், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். அதன் பிறகு, சுல்தான் ஹுஸேனின் அனுமதியுடன் சிங்கப்பூர், ப்ரிட்டிஷின் வர்த்தக நிறுவனங்களிள் ஒன்றாக மாறியது. ராஃபில்ஸ், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன், சிங்கையில் 1000 பேர் மட்டுமே இருந்தனர். அதில் பெரும்பாசானோர் மலாய்க்காரர்கள். ஆனால், 1860-களில், சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிவெகுவாகவே 80000-த்தை மிஞ்சியது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனர்கள். நிறைய வெளிநாட்டர்கள், சிங்கப்பூரின் செழிப்பான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கே வந்தனர். 1870-க்கு பிறகு, சிங்கப்பூர் உலகலவில் ஒரு ரப்பர் ஏற்றுமதி மையமாக முன்னேறியது.

அதன் பொருளாதாரம் முன்னேறிக்கொண்டே இருந்த வேளையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. அப்போது, ஜப்பானியர்கள் ப்ரிட்டிஷின் பிரதேசங்களை தாக்கி ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்கள் மலேசியாவை ப்ரிட்டிஷிடமிருந்து கைப்பற்றியதைத் தொடந்து, சிங்கப்பூரின் மேல் தாக்குதல்களை நடத்தியது. இராணுவ பலத்தையும், மன பசத்தையும் இழந்த ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்களிடம் 1942-யில் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சரணடைந்தது.

ஜப்பானிய ஆக்கிரமப்பின் காலம், சிங்கப்பூரர்கள் மிகவும் அவதிப்பட்டக் காலம் எனக்கூறலாம். ஜப்பானிய இராணுவ வீரர்கள், சிங்கப்பூர் மக்களை, குறிப்பாக சீனர்களை, மிகவும் கடுமையானகவும் மோசமாகவும் நடத்தினர். கண்டிப்பாக இருந்த அவர்கள், அவர்களுக்கு பிடிக்காததை செய்தால், உடனடியாக மரண தண்டனையை வழங்கினர். மேலும், அவர்களுக்கு எதிராக வேலை செய்பவரைக் கண்டறிந்தால், அவர்கள் தேவைப் படும் தகவல்களை கூறுவது வரையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பின் வேளையில் நிறையப் பேர் கொல்லப்பட்டனர்; பலர் தங்களின் குடும்பத்தினரையும் அன்புக்கூறியவர்களையும் இழந்தனர்.

1945-யின் செப்டம்பர் மாதத்தில், ஜப்பானியர்கள் சரணடைந்ததால், சிங்கப்பூர் மீண்டும் ப்ரிட்டிஷின் அட்சிக்கு திரும்பியது. ஜப்பானியர்கள் போய்விட்டார்கள் என்று மகிழ்ந்தாலும், பலர், ப்ரிட்டிஷின் மோசமான பாதுகாப்பை எண்ணி கோபித்துக்கொண்டனர். சிங்கப்பூரில், கம்யூனிசம் பரவவும் ஆரம்பித்தது. கம்யூனிசத் தாக்கமே, சிங்கப்பூரில் பிறகு நடந்த மரியா ஹெர்டொக், ஹொக் லீ ஆகிய கலவரங்களுக்கு வழிவகுத்ததது.

1955 ஆம் ஆண்டு, தொழிலாளர் முன்னணி கட்சியின் சுதந்திர தலைவர், டேவிட் மார்ஷல் சிங்கப்பூரின் முதல் பொதுத்தேர்தலில் வெற்றி வெற்றார். ஆனால், அவரால் ப்ரிட்டிஷை சிங்கப்பூருக்கு சுதந்திரம் அளிக்க சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவருக்கு அடுத்து, லிம் யூ ஹொக் அந்நிலையில் அமர்த்தப்பட்டார். அவரால், ப்ரிட்டிஷிடம் சிங்கப்பூருக்கு தன்னாட்சி (self-government) அளிப்பதற்கு சம்மதிக்க வைத்தார். தன்னாட்சி என்றால் அனைத்து அம்சங்களையும் சிங்கப்பூரே தானாக கவணித்துக்கொள்ளலாம். ஆனால், நாட்டு பாதுகாப்பையும் வெளிநாட்டின் தொடர்புகளையும் விஷயங்களையும் பற்றி ப்ரிட்டிஷ் அரசாங்கமே பார்த்துக்கொள்ளவதே ஒப்பந்தம்.

1959 மே மாதம், முழு உட்புற தன்னாட்சியை பெற்ற சிங்கப்பூரின் பொது தேர்தலில் மக்கள் செயலாளர் கட்சியே அபார வெற்றியைப் பெற்றது. லீ குவான் யூ, சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார்.

31 அகஸ்ட் 1963, பெரும்பாளன மக்களின் சம்மந்தத்துடன் மலேயாவுடன் மலேசியாவை அமைத்தது. ஆனால், சிங்கப்பூரின் மாநில  அரசாங்கத்திற்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் பல அரசாங்க, பொருளாதார கருத்துவேறுபாடுகள் இருந்தன.

ஆகையால், மலேசிய, சிங்கப்பூரை வெளியேறுமாருக் கேட்டுக் கொண்டது.
9 ஆகஸ்ட் 1965 அன்று, சிங்கப்பூர் சுதந்திரம்  பெற்றது. அதுவே நமது தேசிய தினமாகக் கொண்டாடுகிறோம்.


அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும்  ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சிங்கப்பூரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும், கடந்த வருதத்தில் கண்ட வளர்ச்சியை எண்ணி மேலும் மேலும் வியப்போடும், பெருமையோடும் இந்நாளைக் கொண்டாடுகிறோம். இவ்வருடம் சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை நாம் அனைவரும் பெருமையுடன் கொண்டாடுகிறோம்.



சிங்கப்பூரர் கூடி, தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர்