வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Sunday, 29 March 2015

#7: சிங்கப்பூரின் பிரபலாமான உணவு வகைகள்

இனநல்லிணக்கம் நிறைந்த நம் சிங்கப்பூரில் பல வகையான உணவு வகைகளை நாம் காணமுடியும். சீன உணவு, மலாய் உணவு, இந்திய உணவு, மேற்கத்திய உணவு போன்ற வெவ்வேறு வகையான உணவுகளையும் நாம் ருசித்துப் பார்க்க முடியும். இவ்வளவு உணவு நகைகளின் மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் யாவை என்பதை இந்த வலைப்பகுதியில் காண்போம்.

1.    Chicken Rice (கோழிச்சோறு)

‘Hainanese Chicken Rice’ என்கிற சீன வகை கோழிச்சோறு, முதல் முதலில் வந்த சீனர்களின் தாக்கத்தினால் இன்கே அது தோன்றியது. பரவளாக சிங்கப்பூரர்களால் விரும்பி உண்ணப்படும் இவ்வுணவு வகையை மிகவும் சுலபமாகவே செய்ய இயலும். இதில், வேகவைத்த கோழி, மணம் நிறைந்த சாதம், சோயா சாஸ், மிளகாய் இஞ்சி பேஸ்ட் ஆகியவை உள்ளன. ருசியான இந்த கோழி சோறை எளிமையாக சிங்கப்பூரில் இருக்கும் பல உணவகங்களில் வாங்கி சாப்பிடலாம்.

2.    Nasi Lemak (நாசி லமாக்)

நாசி லமாக்
மலாய் உணவு வகையான நாசி லமாக்கில், வருத்த நெத்திலி, கொட்டைகள், வருத்த மீன், முட்டை, வெள்ளரிக்காய் ஆகியவையோடு சாதத்தோடுக் கலந்திருக்கும். பலர், நாசி லமாக்கை மிளகாய் தொட்டு சாப்பிட விரும்புவார்கள். பெரும்பாலாண உணவு நிலையங்களில் இதை வாங்க இயலும். ஆடம் சாலை உணவு நிலையத்தில் தான் சிங்கப்பூரிலேயே மிகவும் புகழ்பெற்ற நாசி லமாக் கடை உள்ளது.


3.    Fish Head Curry (மீன் தலைக்கறி)

மீன் தலைக்கறி
இது ஒரு இந்திய உணவு வகை. தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் தான் இந்த உணவு தோற்றம் பெற்றது. காரமான குழம்பை தயாரித்து, அதில் காய்கறிகளோடு, சிவப்பு ஸ்நாப்பர் மீனின் (Red snapper fish) தலையை, சாதத்துடம் சாப்பிட பலர் விரும்புவர். லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apollo, ரேஸ் கோர்ஸ் ரோடில் இருக்கும் Muthu’s Curry, ஆகிய உணவகங்களின் இந்த மீன் தலை கறி சிங்கப்பூரர்களால் மிகவும் விரும்பப்பட்டு, ருசிக்கப் படுகின்றது.


4.    Kaya Toast (காயா டோஸ்ட்)

சிங்கப்பூரர்கள் காலையில் விரும்பி உண்ணும் உணவுகளில் காயா டோஸ்ட் மிகவும் பிரபலமானது. ரொட்டியில் காயாவைத் தடவி, அதை மைலோவுடனோ, காப்பியோடோ உண்ணப்படுகின்றது. காயா என்பது, முட்டை, சர்க்கரை, தேங்காய் பால், பண்டான் ஆகியவையைப்போட்டு செய்யப்படும் ஒரு ரொட்டிக்கலவை (Bread spread). சிங்கப்பூரின்ல் உள்ள பெரும்பாலான காப்பி கடைகளில் இந்த உணவை வாங்கமுடியும்.


5.    Chilli Crab (சில்லீ நண்டு)

சில்லீ நண்டு
சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் முதலில் சாப்பிட்டு ருசிப்பார்க்க விரும்பும் உணவு, புகழ்பெற்ற சில்லி நண்டே ஆகும். வேகவைக்கப்பட்ட நண்டை ஒரு காரசாரமான சாஸில் போட்டு சாப்பிடுவார்கள். உப்பு, காரம், புளிப்பு இருந்தாலும் அதில் சிறிதலவு இனிப்பும் இருப்படுப் போலவே இருக்கும். அந்த ருசிகளின் கலவையே இந்த உணவின் சுவையைக் கூட்டுகிறது; அதுவே இந்த உணவின் சிறப்பு அம்சம் என்றேக் கூறலாம். இந்த உணவைத் தயாரிக்கும் உணவகங்களில் சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்தவற்றில் சில இவையே:
-       No Signboard Seafood Restaurant
-       Palm Beach Seafood (at One Fullerton)
-     Singapore Seadfood Republic (at Resorts World Sentosa)


#6: சிங்கப்பூரில் கல்வி

கல்வி என்பது சிங்கப்பூரின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய வரவு செலவு தொகைகளில் சுமார் 20% கல்விக்கே செலவிடப்படுகிறது. கல்வி சமந்தப்பட்ட விஷயங்களை முடிவெடுக்கும் பொறுப்பு கல்வி அமைச்சைச் சார்ந்தது. தற்போதைய கல்வி அமைச்சர், திரு. ஹெங் ஸ்வீ கீட் (Mr. Heng Swee Keat). அரசாங்கப் பள்ளிகளின் முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்ளும் அதே வேளையில், தனியார் பள்ளிகளையும் கண்கானித்து, அவற்றுக்கு ஆலோசனைகளை வழங்குவதை தன் பொறுப்பாகக் கொண்டுள்ளது, கல்வி அமைச்சு.

சிங்கப்பூரில், கட்டாயமாக அனைத்து பிள்ளைகளும் குறைந்தது தொடக்கப்பள்ளி கல்வியையாவது முடிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், தங்களின் சொந்த தாய்மொழியை இரண்டாவது மொழியாகவும் கற்றுக்கொள்வது அவசியம். தாய்மொழிப் பாடங்களைத் தவிர்த்து, அனைத்து பாடங்களும் ஆங்கிலேயத்திலேயே கற்பிக்கப்படும்.

சிங்கப்பூரில் பொதுவாக அனைவரும் மழலையர் பள்ளிக்குப் பின் தொடக்கப்பள்ளிக்கு 7 வயதில் சேர்வார்கள். தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பில், தொடக்கப்பள்ளி கல்வியை முடிப்பதைக் குறிக்கும் வண்ணம், மாணவர்கள் PSLE என்கிற தேசிய தேர்வை செய்வார்கள். PSLE தேர்வின் மதிப்பெண்களைப் பொருத்தே மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்வர்.

உயிர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 4 அல்லது 5 வருடம் படிக்க வேண்டியிருக்கும். உயர்னிலையப்பள்ளி கல்வி முடித்தவுடன் மேலும் படிக்க விரும்புவோர் தொடக்கக் கல்லூரிலியோ பாலிடெக்னிக்யிலோ அவர்களுடைய கல்வியைத் தொடரலாம். மேற்கொண்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கலாம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS)
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS)
தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU)
சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU)
மேலாண்மை சிங்கப்பூர் நிறுவனம் (SIM)
சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT)
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD)

ஆகியவை சிங்கப்பூரில் இருக்கும் பல்கலைக்கழங்கள் ஆகும்.

மாண்வர்கள் படிப்பை தவிர்த்து, வேறு துறையிலும்  முன்னேற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளிலும், மாணவர்கள் கட்டாயமாக ஒரு இணைப்பாட நடவடிக்கையில் சேர வேண்டும். அது ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஒரு கலையாக இருக்கலாம், அதை மாணவர்களே முடிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் கல்வி துறையில் சிறப்பு திட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாணவனுக்கும், அவனுடைய தனிபட்ட பலத்தையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதற்கே இத்திட்டங்கள். உதாரணத்திற்கு, PSLE மதிப்பெண்ணுக்கு பதிலாக, பிடித்த உயர்நிலைப் பள்ளிக்கு, அவர்களின் திறமையை வைத்து Direct-School Admission (DSA) என்கிற திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மிகவும் நன்றாக செய்யும் மாணவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை அனித்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பது சிங்கப்பூர் கல்வி அமைச்சின் குறிக்கோள்.

School of the Arts (SOTA)
மேலும், படிப்பை தவிர மற்ற அம்சங்களிலும் திறமைக்கொண்டுள்ள மாணவர்களுக்கு, அத்திறமையை வளர்த்துக்கொள்ள சிறப்பு பள்ளிகள் கட்டப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு, தொடக்கப்பள்ளி 6-ஆம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவி, நடனகலையில் சிறந்து விளங்கி, அதில் மிகவும் அதிகமான ஆர்வத்தைக் காட்டினால், அவள் ஒரு சாதாரண உயர்நிலைப்பள்ளியில் சேர்வதற்கு பதிலாக, சிங்கப்பூர் கலை பள்ளியில் (School of the Arts- SOTA) சேரலாம். NUS High School, School of Science and Technology (SST) ஆகிய சிறப்பு பள்ளிகள் அறிவியல் கணிதம் ஆகியவையிலும், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவையிலும் சிறப்பிக்கின்றன. அதேப் போல, விளையாட்டில் திறமைக்கொண்டவர்கள், சிங்கப்பூர் விளையாட்டு பள்ளியில் சேரலாம்.
 
Singapore Sports School


இதுப் போல, ஒரு மாணவனின் திறமைக்கேற்ப முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சிங்கை அரசாங்கம் அதிக அக்கறைக் காட்டி, பல்வேரு திட்டங்களியும் வாய்ப்புகளையும் அமைத்துள்ளது. சிங்கப்பூரின் படிப்பவர், கிடத்த அற்புதமான கல்விக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

#5: சிங்கையில் இனநல்லிணக்கமும் கலாச்சாரமும்

இந்தியாவைப் பார்த்தால், பெரும்பாலானோர் இந்தியர்களே.
மலேசியாவில், அதிகமான மலாய்க்காரர்களே உள்ளனர்.
சீனாவில், சீனர்களே அதிகம்.

ஆனால், சிங்கப்பூர் சற்று வேற்றுப்பட்டது. சிங்கப்பூரில், பல இனத்தினற்களுக்கும் பல மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாவதை பரவலாகக் காணலாம்.

மற்றவர்களின் கலாச்சாரங்களையும் இன/மத நம்பிக்கைகளாயும் மதித்து நடத்தவேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் பெரிதும் வலியுருத்துகிறது. நமது கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சிங்கப்பூரர்கள், சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஒரு சிங்கப்பூரர், மற்ற இனத்தினரைப் பற்றி ஒரு உணர்வற்ற கருத்தைச் சொன்னால், அது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவருக்கு அபராதம் அளிக்கப்படுவதோடு, தன் வேலையை இழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.

இனநல்லிணக்கத்தை மேலும் வலியுறுத்த ஆண்டுதோரும் ஜூலை 21-ஆம் தேதி இணநல்லிணக்கத் தினத்தைக் கொண்டாடுகிறோம். இத்தினத்தன்று, பள்ளி மாணவர்கள் தங்களின் கலாச்சார ஆடைகளில் வருவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்நாள், நம்மை சுற்றி இருக்கிறவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. அதே வேளையில், மாணவர்கள் தங்களின் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கவும் உதவுகிறது.

சிங்கப்பூரின் இருமொழி திட்டத்தைப் பற்றிய ஒரு செய்தி
சிங்கப்பூரில், அனைவரும் ஆங்கிலத்தை தங்களின் முதல் மொழியாகவும் தங்களின் தாய்மொழியை இரண்டாம் மொழியாகவும் கற்க வேண்டும். ஆங்கிலத்தையே வேலை நேரங்களில் பயன்படுத்த வேண்டும்; இதன் மூலம், சிங்கப்பூரர்களுக்கிடையே உள்ள தொடர்பு வலுபெறும். அதே நேரத்தில், தாய்மொழியைக் கற்றுக்கொளவதன் நோக்கம், சிங்கப்பூரர்கள் தங்களின் கலாச்சார வேர்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதே, என்றுக் கூறினார், இந்த இருமொழி திட்டத்தை அறிமுகப்படுத்திய திரு. லீ குவான் யூ.


லிட்டில் இந்தியா

சிங்கப்பூரில், பெரும்பாலானோர் சீனர்கள், மலாய்க்காரர்கள், அல்லது இந்தியர்கள். அனைவரும் சிதறிக்கிடக்காமல் கலந்து வாழ்ந்தாலும், அவ்விணத்தினற்களின் கலாச்சார பண்பாட்டுகளை பிரதிபலிக்கும் வண்ணம் மூன்று இனப் பகுதிகள் உள்ளன: சைனாடவுன், கம்போங் கிளாம், லிட்டில் இந்தியா. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் இம்மூன்று இனங்களின் முக்கிய பண்டிகைகள் பொது விடுமுறைகளாக திகழ்கின்றன. உதாரணத்திற்கு, சீனப்புத்தாண்டு, ஹரி ராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆகியவையைக் குறிப்பிடலாம். கலாச்சாரத்தை மேலும் வலியுறுத்த, பல நிறுவனங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை சமூக மன்றங்களின் ஏற்பாடு செய்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபக் காலத்தில், நன்யாங் தொழினுட்பக் கல்லூரி, தங்கிலின் சமூக மன்றத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். அது மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது.

கம்போங் கிளாம்
சைனாடவுன்
இக்கொண்டாங்களில், பண்டிகையைக் கொண்டாடும் இனத்தினரைத் தவிர, மற்ற இனத்தினரும் வரவேற்கப்படுகின்றனர். இதன் மூலம், அந்த தனிப்பட்ட கலாச்சாரத்தை சேர்ந்தவர், அதை மறக்காமல் இருக்க உதவுவோடு, மற்ற இனங்களும் அக்கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளலாம். இதனால், இனநல்லிணக்கமும் மேம்படும்.


சிங்கப்பூரர்கள் ஆகிய நாம், இவ்வினநல்லிணக்கத்தைக் கடைபிடிப்பது அவசியம். இவ்வொற்றுமையே நமது நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகிறது. இந்நல்லிணக்கமே நம்மை வேறு நாடுகளிலிருந்து வேறுப்படுத்துகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக கலந்திருப்பது நமது சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

Saturday, 28 March 2015

#4: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 2)

முந்தைய வலைப்பதிவில், தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் பார்தோம். இப்பகுதியில் மேலும், தேசிய சின்னங்கள் ஆகிய மாநில முகடு, சிங்கத்தலை சின்னம், மற்றும் தேசிய மலர் பற்றி இவ்வலைப்பகுதியில் காணலாம்.


1. மாநில முகடு (state crest)
“National Coat of Arms” எனப் படும் சிங்கப்பூரின் முகடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் துணை பிரதமர், டாக்டர். தொ சின் சை (Dr. Toh Chin Chye) தான் யோசனை செய்து வைத்திருந்தார். மாநில முகடு, தேசிய கொடி ஆகிய அவரின் இரண்டு யோசனைகளையும் வரைந்து நினைவாக்கியது, கலாச்சார அமைச்சில் பணிப்புரிந்த திரு. ஜோசப்ஃ தியோ (Mr. Joseph Teo).

சிங்கப்பூரின் மாநில முகடு
இம்முகடில், தேசிய கொடியைப் போன்று உள்ள ஒரு கேடயமும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு சிங்கமும், வலது பக்கத்தில் ஒரு புலியும் உள்ளது.

தேசியக் கொடியைப் போல, இதிச் இருக்கும் கவசத்தில் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், வெள்ளைப் பகுதி, நீடித்துநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

‘Singapura’ என்பது, மலாய் மொழியில் ‘Lion city’ என்பதற்கு சமம். ஆகையால், முகடில் இருக்கும் சிங்கம், சிங்கப்பூரைப் பிரதிபலிக்கிறது. இதில் இருக்கும் புலி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இருந்த கடந்தப் பந்தங்களைக் குறிக்கிறது. அதோடு, சிங்கப்பூரின் கொள்கை, “Majulah Singapura” (முன்னேறு சிங்கப்பூர்) என்பதைக்கொண்டுள்ளா நீல நிற ரிபன் ஒன்று உள்ளது.

அதிக மதிப்புடனும் மரியாதையுடனுமே இம்முகடை நாம் பயன்படுத்த வேண்டும். அரசாங்க அமைச்சுகளுக்கு மட்டுமே இச்சின்னத்தைப் பயன்படுத்த அனுமதியுள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த பயன்களுக்கு உபயோகப் படுத்த, அரசாங்கத்திடமிருந்து அனுமதிப் பெறுவது அவசியம்.


2. சிங்கத்தலை சின்னம் (The Lion Head Symbol)
இச்சின்னம், தேசிய கொடி, மாநில முகடு ஆகியவை இருக்கும் அளவிற்கு முறைசாரா சின்னம். இச்சின்னத்தை, பொது மக்களும் நிறுவனங்களும் அனுமதிப் பெறாமல், நாட்டுப் பற்றை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்தலாம். சுலபமாக சிங்கப்பூரின் சின்னம் என்று இச்சின்னத்தை பார்த்தவுடனே அடையாளம் காணலாம்.
1989-யில், பொது மக்கள் பயன்படுத்த ஒரு தேசிய சின்னம் தேவை என்பதையறிந்து, அரசாங்கம் தீர்வு செய்தது. கலைப்பள்ளி மாணவர்கள், ஒரு சின்னத்தை வரையுமாறு கேட்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டது, திரு மைகல் லீ.

சிங்கத்தலை சின்னம்
சிங்கம் நமது நாட்டிற்கு முக்கியமான ஒரு விலங்கு. அதன் தலையைக் கொண்டுள்ள இச்சின்னம், தைரியம், பலம், சிறந்துவிளங்குதல், ஆகிய மூன்று பண்புகளை பிரதிபலிக்கிறது. இச்சின்னம், நமது தேசிய வண்ணங்களான சிவப்பு மற்றும் வெள்ளையைக் கொண்டுள்ளது. மேலும், சிங்கத்தின் 5 தலைமுடிப் பிரிவுகள், தேசிய கொடியின் 5 நட்சத்திரங்கள் குறிக்கும் நியமங்களைக் குறிக்கிறது: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

இச்சின்னம் முறைசாரம் இல்லாமல் இருந்தாலும், அதை மதித்துப் பயன்படுத்துவது சிங்கப்பூரரிகளின் கடமையாகும்.


3. Vanda 'Miss Joaquim' - சிங்கப்பூரின் தேசிய மலர்.
இந்த ஆர்கிட் மலர், Vanda hookeriana, Vanda trees ஆகிய இரண்டின் கலப்பு ஆகும். இதை முதல் முதலாக வளர்த்த Agnes Joaquim-இன் நினைவில், இம்மலருக்கு Vanda 'Miss Joaquim' என்றப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல இனங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரைப் பிரதிபலிக்க, 1981-யில், இம்மலர், நமது தேசிய மலராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மலர், இளம் நாடான சிங்கப்பூரின் தனிச்சிறப்பையும், பல்லிண ஒற்றுமையையும் குறிக்கிறது.

சிங்கையின் தேசிய மலர்: Vanda 'Miss Joaquim' மலர்