வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Sunday, 29 March 2015

#7: சிங்கப்பூரின் பிரபலாமான உணவு வகைகள்

இனநல்லிணக்கம் நிறைந்த நம் சிங்கப்பூரில் பல வகையான உணவு வகைகளை நாம் காணமுடியும். சீன உணவு, மலாய் உணவு, இந்திய உணவு, மேற்கத்திய உணவு போன்ற வெவ்வேறு வகையான உணவுகளையும் நாம் ருசித்துப் பார்க்க முடியும். இவ்வளவு உணவு நகைகளின் மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் யாவை என்பதை இந்த வலைப்பகுதியில் காண்போம்.

1.    Chicken Rice (கோழிச்சோறு)

‘Hainanese Chicken Rice’ என்கிற சீன வகை கோழிச்சோறு, முதல் முதலில் வந்த சீனர்களின் தாக்கத்தினால் இன்கே அது தோன்றியது. பரவளாக சிங்கப்பூரர்களால் விரும்பி உண்ணப்படும் இவ்வுணவு வகையை மிகவும் சுலபமாகவே செய்ய இயலும். இதில், வேகவைத்த கோழி, மணம் நிறைந்த சாதம், சோயா சாஸ், மிளகாய் இஞ்சி பேஸ்ட் ஆகியவை உள்ளன. ருசியான இந்த கோழி சோறை எளிமையாக சிங்கப்பூரில் இருக்கும் பல உணவகங்களில் வாங்கி சாப்பிடலாம்.

2.    Nasi Lemak (நாசி லமாக்)

நாசி லமாக்
மலாய் உணவு வகையான நாசி லமாக்கில், வருத்த நெத்திலி, கொட்டைகள், வருத்த மீன், முட்டை, வெள்ளரிக்காய் ஆகியவையோடு சாதத்தோடுக் கலந்திருக்கும். பலர், நாசி லமாக்கை மிளகாய் தொட்டு சாப்பிட விரும்புவார்கள். பெரும்பாலாண உணவு நிலையங்களில் இதை வாங்க இயலும். ஆடம் சாலை உணவு நிலையத்தில் தான் சிங்கப்பூரிலேயே மிகவும் புகழ்பெற்ற நாசி லமாக் கடை உள்ளது.


3.    Fish Head Curry (மீன் தலைக்கறி)

மீன் தலைக்கறி
இது ஒரு இந்திய உணவு வகை. தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் தான் இந்த உணவு தோற்றம் பெற்றது. காரமான குழம்பை தயாரித்து, அதில் காய்கறிகளோடு, சிவப்பு ஸ்நாப்பர் மீனின் (Red snapper fish) தலையை, சாதத்துடம் சாப்பிட பலர் விரும்புவர். லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apollo, ரேஸ் கோர்ஸ் ரோடில் இருக்கும் Muthu’s Curry, ஆகிய உணவகங்களின் இந்த மீன் தலை கறி சிங்கப்பூரர்களால் மிகவும் விரும்பப்பட்டு, ருசிக்கப் படுகின்றது.


4.    Kaya Toast (காயா டோஸ்ட்)

சிங்கப்பூரர்கள் காலையில் விரும்பி உண்ணும் உணவுகளில் காயா டோஸ்ட் மிகவும் பிரபலமானது. ரொட்டியில் காயாவைத் தடவி, அதை மைலோவுடனோ, காப்பியோடோ உண்ணப்படுகின்றது. காயா என்பது, முட்டை, சர்க்கரை, தேங்காய் பால், பண்டான் ஆகியவையைப்போட்டு செய்யப்படும் ஒரு ரொட்டிக்கலவை (Bread spread). சிங்கப்பூரின்ல் உள்ள பெரும்பாலான காப்பி கடைகளில் இந்த உணவை வாங்கமுடியும்.


5.    Chilli Crab (சில்லீ நண்டு)

சில்லீ நண்டு
சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் முதலில் சாப்பிட்டு ருசிப்பார்க்க விரும்பும் உணவு, புகழ்பெற்ற சில்லி நண்டே ஆகும். வேகவைக்கப்பட்ட நண்டை ஒரு காரசாரமான சாஸில் போட்டு சாப்பிடுவார்கள். உப்பு, காரம், புளிப்பு இருந்தாலும் அதில் சிறிதலவு இனிப்பும் இருப்படுப் போலவே இருக்கும். அந்த ருசிகளின் கலவையே இந்த உணவின் சுவையைக் கூட்டுகிறது; அதுவே இந்த உணவின் சிறப்பு அம்சம் என்றேக் கூறலாம். இந்த உணவைத் தயாரிக்கும் உணவகங்களில் சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்தவற்றில் சில இவையே:
-       No Signboard Seafood Restaurant
-       Palm Beach Seafood (at One Fullerton)
-     Singapore Seadfood Republic (at Resorts World Sentosa)


No comments:

Post a Comment